/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கல்
/
கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கல்
ADDED : பிப் 14, 2025 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி உள்ளாட்சித்துறைக்கு உட்பட்ட காரைக்கால் நகராட்சியில், பணியின்போது இறந்த ஊழியர்களின் 22 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் வேலைக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது.
முதல்வர் ரங்கசாமி, அவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.
குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், சந்திரபிரியங்கா, ரமேஷ், நாகதியாகராஜன், உள்ளாட்சித்துறை இயக்குநர் சக்திவேல், துணை இயக்குநர்கள் சவுந்தர்ராஜன், ரத்னா, காரைக்கால் நகராட்சி ஆணையர் சத்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.