லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்
UPDATED : அக் 30, 2026 12:07 AM
ADDED : அக் 30, 2026 12:07 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பொதுமக்களிடம் லஞ்ச ஒழிப்பு குறிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்.
நாடு முழுதும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 26ம் தேதி துவங்கி வரும் -1ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, புதுச்சேரி அரசு துறைகளில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் எஸ்.பி., நல்லம் கிருஷ்ணராய பாபு தலைமையிலான போலீசார் நேரு வீதியில் பொது மக்களுக்கு லஞ்ச ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
