ADDED : அக் 17, 2026 02:27 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் பாரம்பரிய வைத்தியர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி சுவாமிகள் பாரம்பரிய கலாசார மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சிவராஜனார் சுவாமிகள் சமுதாய கல்லுாரி இணைந்து பட்டமளிப்பு நிகழ்ச்சி தமிழ் சங்கத்தில் நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி சிறப்புரையாற்றினார். மருத்துவர் அசோக்குமார் நோக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில், அமைச்சர் நமச்சிவாயம், பிரமேந்திர சுவாமிகள், லட்சுமி நரசிம்ம ராமானுர் சுவாமிகள், தமிழ் சங்க தலைவர் முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம், நாமக்கல், திருப்பத்துார் மாவட்டங்களில் இருந்து பாரம்பரிய வைத்தியர்கள் மற்றும் அனுபவமுள்ள பாரம்பரிய மருத்துவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கப்பட்டது.
