UPDATED : அக் 16, 2026 10:50 PM
ADDED : அக் 16, 2026 10:47 PM

புதுச்சேரி: புதுச்சேரி பாரத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையும், ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள மறுவாழ்வு மற்றும் நடத்தை சார் அறிவியல் கல்லுாரிகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாரத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராஜன், இயக்குனர் டாக்டர் அருண் பானிக் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுச்சேரி மக்களுக்கு பல சேவைகள் கிடைத்திட வழிவகுக்கும். இதன் மூலமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, செவித்திறன் பரிசோதனை மற்றும் சிகிச்சை, பள்ளி மாணவர்களுக்கு கற்றல் குறைபாடுகள் பரிசோதனை மற்றும் சிகிச்சை, பேச்சு குறைபாடுகள் மற்றும் மனநலம் சார்ந்த குறைபாடுகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைகள், ஆராய்ச்சிகள், கருத்தரங்குகள், மேற்கொள்ளப்படும்.
இந்த ஒப்பந்தம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி பவுண்டேஷன் பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் தலைமையில் நடந்தது. எற்பாடுகளை இணை பதிவாளர் பெருமாள் செய்திருந்தார்.
