/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் ஐ.டி., துறை மாணவர் சங்கம் துவக்கம்

ADDED : ஆக 08, 2025 02:11 AM

புதுச்சேரி: ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) சார்பில், 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சங்கம் துவங்க விழா நடந்தது.
தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் தென்றல் தலைமை தாங்கினார். கல்லுாரியின் தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், அறங்காவலர் சிந்து, கல்லுாரி முதல்வர் மகேந்திரன், டீன் அகாடெமிக்ஸ் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை, சொசைட்டி ஜெனரல் குளோபல் சொல்யூஷன் சென்டர், சிறப்பு சோதனை பொறியாளர் பிரபாவதி குப்புசாமி பங்கேற்று, ஸ்பிரிண்ட் சுழற்சிகளில் தொடர்ச்சியான சோதனை, ஒத்துழைப்பு மற்றும் ஆட்டோமேஷன், சோதனை உத்திகள், ஜிரா மென்பொருள், ஒருங்கிணைந்த செயல்பாடு சோதனை போன்ற கருவிகளை பயன்படுத்தி தர உத்தரவாத செயல்பாடுகள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியை தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர்கள் அருண்குமார், இளவரசி ஆகியோர் ஒருங்கிணைந்தனர்.