ADDED : நவ 10, 2025 11:24 PM
வில்வியனுார்: வில்லியனுார் அருகே ஐ.டி., ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வில்லியனுார் அருகே உள்ள வி.மணவெளி மாணிக்கவாசர் வீதியை சேர்ந்த நாகராஜ் மகன் தினேஷ்,27; இவர் சென்னையில் தங்கி அங்குள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி லாவண்யா,20; கடந்த 6ம் தேதி லாவண்யாவின் தங்கைக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை பார்த்துக் கொள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து 7ம் தேதி காலை சென்னையில் இருந்து தினேஷ்,வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, உன் மனைவியை வீட்டுக்கு அழைத்து வரவேண்டியது தானே என,தினேஷிடம் அவரது தந்தை கேட்டு திட்டியுள்ளார்.
இதனால் தினேஷ் மன வருத்தத்தில் இருந்துள்ளார். அதனை தொடர்ந்து 8ம் தேதி இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தினேஷ் மற்றும் குடும்பத்தினர் துாங்கச் சென்றனர்.மறுநாள் காலை தினேஷின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தினேஷ் மனைவி லாவண்யா புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

