/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'அரசியல் தெளிவின்றி உளறுவது ஜான்குமாரின் வாடிக்கை' சம்பத் எம்.எல்.ஏ., கடும் தாக்கு

ADDED : ஜன 10, 2025 05:58 AM
புதுச்சேரி: இன்றைய காலகட்டத்தில்,எந்ததெளிவும் இன்றி அவ்வப்போது உளறுவது பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமாரின்வாடிக்கையாக உள்ளதாக சம்பத் எம்.எல்.ஏ., குற்றம் சாட்டி உள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க., ஆதரவு இருப்பதால் தான்புதுச்சேரி பா.ஜ., அரசுக்கும், சபாநாயகர் பதவிக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என, பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமார் சிறு பிள்ளைத்தனமாக, கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களை வைத்து வியாபார நோக்கில் செயல்படும் அவருக்கு தி.மு.க., ஆதரவாக இருக்கும் என்று நினைப்பது கோமாளித்தனம். வரும் தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதிக்கு போகப்போவதாக லாட்டரி சீட்டு அதிபர்களுடன் கூட்டணி போட்டுள்ளார்.முதலில் அவரது அரசியல் என்னவென்று பொதுவெளியில் அவர் விளக்க வேண்டும். அதன் பிறகு கருத்து கூறட்டும். பள்ளிமாணவனுக்குகூட தெளிவாக அரசியல் தெரிந்துள்ள இன்றைய காலகட்டத்தில் எந்த அரசியல் தெளிவுமின்றி அவ்வப்போது உளறுவது தான் அவரது வாடிக்கை.
லாட்டரி முதலாளியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த போது அவர் மீது, பா.ஜ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பா.ஜ., - தி.மு.க இடையே எவ்வித உறவும் இல்லாத நிலையில் அவதுாறு பரப்பும் வகையில், இதுபோல உளற வேண்டாம். இல்லையேல் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.