/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற தி.மு.க., அரசால் மட்டுமே முடியும் ஜெகத்ரட்சகன் எம்.பி., பேச்சு

ADDED : டிச 14, 2025 05:22 AM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற தி.மு.க., நீதிமன்றத்தை நாடும் என, ஜெகத்ரட்சகன் எம்.பி., பேசினார்.
புதுச்சேரியில் தி.மு.க., சார்பில் நடந்த ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமை துவக்கி வைத்து, அவர், பேசியதாவது:
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் இப்போதிலிருந்தே உழைக்க வேண்டும். இங்கு, முதல்வர் நாற்காலி உடைந்துவிட்டால் கூட அதனை சரி செய்ய டில்லி செல்ல வேண்டும். எங்கோ உள்ள கோவா மாநிலமாக இருக்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற முடியவில்லை.
புதுச்சேரி சுற்றுலா தலமாக இருக்கிறது. இங்குள்ள விமான நிலையத்தை பெரிதாக்கலாம். மூன்று பஞ்சாலைகளை திறக்க வாய்ப்பில்லை. இதற்கெல்லாம் மாநில அந்தஸ்து பெற வேண்டும். அதனை பெற தி.மு.க., ஆட்சியால் தான் முடியும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி நாமும் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்.
எங்கோ இருப்பவர்கள் எல்லாம் புதுச்சேரிக்கு வந்து வேலை செய்கின்றனர். அவர்களில் ஒருவருக்கு கூட தமிழும், மண்ணைப்பற்றியும், மக்களை பற்றியும் புரியவில்லை.
இங்குள்ள முதல்வர், எம்.எல்.ஏ.,க்கள், யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. எங்கோ இருப்பவரை கவர்னராக அமர வைத்து பல்வேறு அதிகாரத்தை தருகிறார்கள். புதுச்சேரிக்கு புயல் நிவாரணம் ரூ.1,200 கோடி கேட்டோம், ரூ.62 கோடி தான் கொடுத்தார்கள். இப்படிப்பட்ட அவல நிலைகளை மாற்ற, புதுச்சேரி மக்களின் நலனை பாதுகாக்க இந்த தேர்தல் களத்தை நாம் பயன்படுத்தியாக வேண்டும். புதுச்சேரி என்றுமே தி.மு.க., கோட்டைதான்' என்றார்.