ADDED : டிச 14, 2025 05:25 AM

திருக்கனுார்: திருக்கனுார் பண்ணைத் தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ், இயற்கை விவசாயம் குறித்த ௨ நாள் பயிற்சி முகாம் சோரப்பட்டு உழவர் உதவியகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.
வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். கண்டமானடியார் ராதாகிருஷ்ணன் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், 70 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
ஆரோவில்லை சேர்ந்த அலெக்ஸ் வீட்டு மாடி தோட்டம் அமைத்தல், நாட்டு ரக காய்கறிகள் சாகுபடி குறித்தும், வேளாண் அலுவலர் ஜோதி கணேஷ், மண்வள பாதுகாப்பு, மண்வள மேம்பாடு குறித்தும் விளக்கம் அளித்தார்.
காரைக்கால் வேளாண் கல்லுாரி பேராசிரியர் ரத்தினசபாபதி, பயிர் சாகுபடியில் பூச்சி மேலாண்மை குறித்து பேசினார். சோரப்பட்டு, வம்புப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயசந்திரன் நன்றி கூறினார்.

