/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
/
ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 18, 2025 02:38 AM

நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் ஸ்ரீ ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியளவில் மாணவர் பேரரசன் 492 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி ஹேமப்பிரியா 489 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி தீக் ஷ்யா 484 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
பள்ளியில் 475க்கு மேல் 20 பேர், 450க்கு மேல் 30 பேர், 400க்கு மேல் 40 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் பாடம், கணிதம் பாடத்தில் 100க்கு 99 மதிப்பெண் இரு மாணவரும், ஆங்கில பாடத்தில் 100க்கு 99 இரண்டு பேரும், அறிவியல் பாடத்தில் ஒருவரும், சமூக அறிவியல் பாடத்தில் 2 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 26 பேரும், ஆங்கிலம் 27, கணிதம் 18, அறிவியல் 13, சமூக அறிவியல் பாடத்தில் 28 பேரும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பள்ளி சேர்மன் மணி, பள்ளி நிர்வாகி மற்றும் முதல்வர் விஜயாமணி ஆகியோர் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.
பள்ளி நிர்வாகி கூறுகையில், 'இப்பள்ளி கிராமப்புற பள்ளியளவில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. மாணவர்களுக்கு கல்வியுடன், நீட், ஜிப்மர், ஐ.ஐ.டி., ஜே.இ.இ., வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது.
பள்ளியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நன்றி' என்றார்.