/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., பொதுச்செயலாளராக ஜெயபால் நியமனம்
/
என்.ஆர்.காங்., பொதுச்செயலாளராக ஜெயபால் நியமனம்
ADDED : ஆக 29, 2025 03:26 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்., பொதுச்செயலாளராக ஜெயபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்., துவங்கப்பட்டபோது, அதன் பொதுச் செயலாளராக பாலன், செயலாளராக ஜெயபால் நியமிக்கப்பட்டனர். மற்றபடி, கட்சியில் முக்கிய நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டுமென்று கட்சியில் கோரிக்கை எழுந்தது. அதன்படி, மாநிலம், மாவட்டம் மற்றும் தொகுதிகள் வாரியாக தலைவர்கள், செயலாளர்கள் என, நிர்வாகிகள் நியமிக்கபட்டனர்.
பின், கட்சியின் அனைத்து அணிகளுக்கும் நிர்வாகிகளை கட்சியின் செயலாளர் என்ற முறையில் ஜெயபால், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் இணைந்து நியமித்து அறிவிப்பு வெளியிட்டனர்.
இதற்கிடையே, என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் பாலன் மறைவிற்கு பின், பல ஆண்டுகளாக காலியாக இருந்து வந்த பொதுச் செயலாளர் பதவி, தற்போது ஜெயபாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை என்.ஆர்.காங்., கட்சியின் தலைவர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார்.