/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜே.சி.எம்., மக்கள் மன்ற கிளை அலுவலகம் திறப்பு
/
ஜே.சி.எம்., மக்கள் மன்ற கிளை அலுவலகம் திறப்பு
ADDED : நவ 10, 2025 03:56 AM

பாகூர்: ஜே.சி.எம்., மக்கள் மன்றத்தின், பாகூர் கிளை அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
விழாவில், ஜே.சி.எம். மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சார்லஸ் குரூப் ஆப் கம்பெனியின் சேர்மன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கலந்து கொண்டு,குத்து விளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்து, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மகளிருக்கு பரிசு பொருட்களை வழங்கினார். பாகூர் சக்திவேல், லட்சுமணன், முருகேசன், ஹரிஹரன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மங்களம் தொகுதி ஜே.சி.எம். ,மக்கள் மன்ற தலைவர் கண்ணபிரான் வாழ்த்தி பேசினார்.
விழாவில், ஆனந்த், பிரபு, பாலமுருகன், உமாபதி, மதன், பாலா, புருஷோத், அரவிந்த், கார்த்தி, ஜெயகரன், இளம்பரிதி, பிரகாஷ், சிவக்குமார், பிரதீப், துரை, ஹரி, கீர்த்தன், தேவா, மணி, சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, பாகூர் முத்தாலம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தரிசனம் செய்தார்.

