/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜே.சி.எம்., மக்கள் மன்றம் துாய்மை பணி
/
ஜே.சி.எம்., மக்கள் மன்றம் துாய்மை பணி
ADDED : அக் 04, 2025 06:46 AM

புதுச்சேரி : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஜே.சி.எம்., மக்கள் மன்றம் சார்பில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
ஜே.சி.எம்., மக்கள் மன்றம் சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காமராஜர் நகர், முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, மங்கலம், திருபுவனை, நெட்டப்பாக்கம் ஆகிய தொகுதிகள் மற்றும் காரைக்காலில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளில் உள்ள பொது இடங்கள், பள்ளி வளாகங்கள், கழிவு நீர் வாய்க்கால் பகுதிகளில் துாய்மைப் படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, ஜே.சி.எம். மக்கள் மன்றத்தினர், காந்தியின் உருவப் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட ஜே.சி.எம். மக்கள் மன்றத்தினர் பங்கேற்று, துாய்மைப் பணியில் ஈடுபட்டு, குப்பைகளை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களைத் தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜே.சி.எம்., மக்கள் மன்றத்தின் 8 கிளை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.