ADDED : மே 05, 2025 06:07 AM
அரியாங்குப்பம்: வீட்டின் உள்ளே புகுந்து மூதாட்டி வைத்திருந்த தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் இந்திராணி, 70, இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, இவரது வீட்டின் உள்ளே புகுந்து, டேபிள் மேல் ஒன்றே கால் சவரன் மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகள் வைத்திருந்தார். வெளியில் சென்று வீட்டு வந்து பார்க்கும் போது, நகைகள் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
பல்வேறு இடங்களில் தேடியும் நகைகள் கிடைக்கததால், அவர் அரியாங்குப்பம் போலீசில் நேற்று புகார் செய்தார்.
இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினார். இதில் மர்ம நபர்கள் வீட்டிலுள் புகுந்து நகைகள் திருடி சென்றது தெரியவந்தது. அதையடுத்து, மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.