ஜிப்மர் பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ஜிப்மர் பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 04, 2026 07:33 PM
புதுச்சேரி: ஜிப்மர் பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளது.
ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில், 2026–27ம் கல்வியாண்டிற்கான பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பி.எஸ்சி., அலைடு சயின்ஸ் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று 5ம் தேதி காலை 9:00 மணி முதல் துவங்குகிறது. 28ம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
நீட் மதிப்பெண் அடிப்படையில் இந்த சேர்க்கை நடக்க உள்ளது. இப்படிப்புகளுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, இடஒதுக்கீடு மற்றும் கட்டண விவரங்கள் அடங்கிய விரிவான தகவல் கையேடு ஜிப்மரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமும் தகுதியும் உள்ள மாணவர்கள் ஜிப்மரின் www.jipmer.edu.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு jipmerbscadmission@gmail.com என்ற இமெயில் முகவரியிலோ அல்லது 0413-2298288 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
