sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மர் மருத்துவர்கள் ஊழியர்கள் விடுமுறை ரத்து

ஜிப்மர் மருத்துவர்கள் ஊழியர்கள் விடுமுறை ரத்து

ஜிப்மர் மருத்துவர்கள் ஊழியர்கள் விடுமுறை ரத்து


ADDED : மே 10, 2025 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2025 01:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு துறை தலைவர்களுடன் அவசரக்கால கூட்டம், இயக்குனர் வீர் சிங் நேகி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் இயக்குனர் வீர் சிங் நேகி கூறுகையில், 'எல்லையில் நிலைமை மேலும் மோசமடைந்து பெரிய அளவிலான தாக்குதல்கள் நடந்தால், மருத்துவம், அறுவை சிகிச்சை, அவசர மருத்துவம், மயக்க மருந்து, குழந்தை மருத்துவம், மகப்பேரியல் மற்றும் மகளிர் மருத்துவம் உள்ளிட்ட உயர் மருத்துவ குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் இவர்கள், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநில எல்லைகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு இந்திய அரசாங்கத்தால் அனுப்பப்படலாம். புதுச்சேரியில் கடல் வழித் தாக்குதல் ஏற்பட்டால், ஜிப்மரின் பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு மருத்துவ பிரிவுகளை கொண்ட அவசரகால குழுவினரால் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், ஜிப்மர் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் அனைத்து விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவசரகால சூழலில் ஜிப்மரில் மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, இந்தியாவில் எங்கும் பணியமர்த்தப்படுவர். தயார் நிலையில் இருக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us