/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் கே.வி. பள்ளியில் தேசிய விளையாட்டு போட்டி
/
ஜிப்மர் கே.வி. பள்ளியில் தேசிய விளையாட்டு போட்டி
ADDED : ஆக 21, 2025 07:02 AM

புதுச்சேரி : கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கான 54வது தேசிய விளையாட்டு போட்டிக்கான 5 நாள் சறுக்கு விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் துவங்கியது.
புதுச்சேரி, ஜிப்மர் வளாகத்தில் உள்ள கே.வி., பள்ளியில் நடந்த துவக்க விழாவிற்கு ஜிப்மர் துணை இயக்குநர் (நிர்வாகம்) ரங்கபாஷ்யம் தலைமை தாங்கினார். கே.வி.எஸ். ஆர்.ஓ. சென்னை மண்டல உதவி ஆணையர் வெள்ளையச்சாமி வரவேற்று பேசுகையில், 'தேசிய அளவிலான இப்போட்டி திறமைகளுக்கான போட்டி மட்டுமல்ல, தோழமை, விளையாட்டுத்திறன் மற்றும் பகிரப்பட்ட கனவுகளின் கொண்டாட்டம்' என்றார். தொடர்ந்து, விளையாட்டு மற்றும் ஒருமைப்பாட்டின் மதிப்புகளை உறுதிப்படுத்தும் வகையில், போட்டியில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
ஜிப்மர் கே.வி.பள்ளி முதல்வர் ராம பிரசாத் நன்றி கூறினார்.
தொடர்ந்து போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி வரும் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஜிப்மர் கேந்திர வித்யாலயா பள்ளியில், தேசிய விளையாட்டு போட்டி துவக்க விழா நடந்தது.