/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடல் வெளியூர் நோயாளிகள் ஏமாற்றம்
/
ஜிப்மர் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடல் வெளியூர் நோயாளிகள் ஏமாற்றம்
ஜிப்மர் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடல் வெளியூர் நோயாளிகள் ஏமாற்றம்
ஜிப்மர் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடல் வெளியூர் நோயாளிகள் ஏமாற்றம்
ADDED : ஏப் 11, 2025 04:19 AM

புதுச்சேரி: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று ஜிப்மர் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது. தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் வந்திருந்த நோயாளிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்., 10ம் தேதி ஜிப்மர் புற நோயாளிகள் பிரிவு இயங்காது என ஜிப்மர் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று ஜிப்மர் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கவில்லை.
இது தெரியாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக அதிகாலையில் வந்து காத்திருந்தனர்.
அதை கண்ட ஜிப்மர் செக்யூரிட்டிகள் ஒலிபெருக்கி வாயிலாக விடுமுறை என, அறிவித்தனர். இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த நோயாளிகள், உறவினர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சைக்காக வந்திருந்த வெளி மாநில நோயாளிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆந்திராவில் வந்திருந்த நோயாளிகள் கூறுகையில், 'கடந்த 7ம்தேதி ஜிப்மர் விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை தெரியாமல் ஏற்கனவே புறப்பட்டு வந்துவிட்டோம். திரும்பி சென்று மீண்டும் வருவது கடினம். எனவே இங்கேயே தங்கி, நாளை (இன்று) ஜிப்மரில் சிகிச்சை பெறுவோம்.
ஜிப்மர் நிர்வாகம் விடுமுறையைகடைசி நேரத்தில் அறிவிக்காமல் ஒரு மாதத்திற்கு முன் அறிவித்தால் எங்களை போன்ற வெளியூர் நோயாளிகள் ஏமாற்றம் அடைவது தடுக்கப்படும்'என்றனர்.
ஜிப்மர் அதிகாரிகள் கூறுகையில், 'மகாவீர் ஜெயந்தி மட்டுமின்றி வரும் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழா, 18ம் தேதி புனிதவெள்ளி நாட்களில் ஜிப்மரின் புற நோயாளிகள் பிரிவான ஓ.பி.டி., இயங்காது.இந்நாட்களில் ஜிப்மர் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்' என்றனர்.

