/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலை வாய்ப்பு முகாம்: 56 பேருக்கு பணி ஆணை
/
வேலை வாய்ப்பு முகாம்: 56 பேருக்கு பணி ஆணை
ADDED : பிப் 02, 2025 04:25 AM

புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் தேசிய வாழ்வாதார சேவை மையம் சார்பில், நடந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற 56 பேர் பணி ஆணை பெற்றனர்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் நவயுகா கன்சல்டண்சி சேவை மையம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.
ரெட்டியார்பாளையம் அலுவலகத்தில் நடந்த முகா மிற்கு, துணை மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். புதுச்சேரி, சென்னையை சேர்ந்த 9 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, ஊழியர்களை தேர்வு செய்தன.
முகாமில், புதுச்சேரியை சேர்ந்த படித்த இளைஞர்கள் 282 பேர் கல்வி தகுதி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டனர்.
இதில், 56 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணை வழங்கப்பட்டது.