தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகளிர் பொறியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் துவக்கம்

 மகளிர் பொறியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் துவக்கம்

 மகளிர் பொறியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் துவக்கம்


ADDED : பிப் 21, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பிப்டிக் நிறுவனம் மற்றும் மா போய் அறக்கட்டளை சார்பில், திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நேற்று துவங்கியது.

லாஸ்பேட்டை, மகளிர் பொறியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாமை கவர்னர் கைலாஷ்நாதன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., அரசு செயலர் முகமது அசன் அபித், கல்வித்துறை இயக்குனர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, தனியார் நிறுவனத்தில், ரூ. 3 லட்சம் சம்பளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பொறியியல் கல்லுாரி பி.காம்., இறுதி ஆண்டு படிக்கும் மாணவி சரண்யாவை கவர்னர் பாராட்டினார்.

தொடர்ந்து, இன்று (21ம் தேதி) காலை 9:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை முகாம் நடக்கிறது. இதில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., பி.எஸ்.சி., ஓட்டல் நிர்வாகம், இதர பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us