/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்
/
புதுச்சேரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஜூன் 27, 2025 05:15 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நாளை 28ம் தேதி காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை புதுச்சேரி நடேசன் நகர், மூன்றாவது குறுக்கு தெருவில் உள்ள மைய அலுவலகத்தில் நடக்க உள்ளது.
அனைத்து சமூகத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்த வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் ஐந்து முன்னணி நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன. முகாமில் 100க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களும் முகாமில் பங்கேற்கலாம். 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
முன் அனுபவம் பெற்ற மற்றும் அனுபவம் இல்லாத மாணவர்களும் பங்கேற்கலாம்.
கூடுதல் விபரங்களுக்கு 0413-2200115 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.