/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரமலானை முன்னிட்டு நலத்திட்ட உதவி ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கல்
/
ரமலானை முன்னிட்டு நலத்திட்ட உதவி ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கல்
ரமலானை முன்னிட்டு நலத்திட்ட உதவி ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கல்
ரமலானை முன்னிட்டு நலத்திட்ட உதவி ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கல்
ADDED : மார் 05, 2026 05:04 AM

புதுச்சேரி: லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு சார்பில் ரமலானை முன்னிட்டு மகளிருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சாய்பாபா திருமண மண்டபத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமை தாங்கி, இஸ்லாமிய மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், அங்காளன் எம்.எல்.ஏ., ஜே.சி.எம்., மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், மண்டல பொதுச்செயலாளர் விஜய்ராஜ், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல் வகாப், பொதுச்செயலாளர்கள் துரைசாமி, பூக்கடை ரமேஷ், பிரபாகரன், பாபு, பரப்புரை பொதுச்செயலாளர் தாடி பாலாஜி, மண்டல பொதுச் செயலாளர்கள் சுரேஷ், கண்ணபிரான், ராபர்ட் ஜேசுதாஸ், மாநில செயலாளர்கள் ரவி ராஜாராம், அனிதா, செய்தித் தொடர்பாளர் முகமது ஷஜிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசுகையில், 'மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் ஈடுபட்டுள்ளேன். மக்களின் வாழ்க்கைத் தரம் வெளிநாடுகளைப் போல உயர வேண்டும். இளைஞர்கள் நன்றாக கல்வி கற்று, வேலைக்குச் சென்று குடும்பத்தை முன்னேற்ற வேண்டும். இங்கு, சாலைகள் முதல் வாய்க்கால்கள் வரை பல பிரச்னைகள் உள்ளன. அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண அரசியலுக்கு வந்துள்ளேன். மக்கள் ஆதரவு அளித்தால் முழு நேரமும் உழைக்கத் தயாராக இருக்கிறேன். வெளிநாடு போல புதுச்சேரியை மாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம்' என்றார்.

