தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போராடி நிதி பெற வேண்டும்  ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ.

போராடி நிதி பெற வேண்டும்  ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ.

போராடி நிதி பெற வேண்டும்  ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ.


ADDED : ஆக 29, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கையின்போது ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ., பேசியதாவது:

பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வர வசதியாக வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும். மத்திய அரசு வழங்கும் நிதியை முழுமையாக பயன்படுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் தனிப்படை அமைக்க வேண்டும்.

கடந்த முறை ரூ.500 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. இதனை தவிர்த்திருக்க வேண்டும். வீடுகளுக்குச் சூரிய மின்சக்தி அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கான காலக்கெடு மார்ச் மாதத்துடன் முடிவடைவதால், அதனை விரைவுபடுத்த வேண்டும். பக்கத்து நாடுகளுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கும் மத்திய அரசு, புதுச்சேரிக்கும் உரிய நிதியை வழங்க வேண்டும். எம்.எல்.ஏக்களை ஒன்றிணைந்து டெல்லி சென்று மத்திய அரசிடம் போராடி நிதியை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us