/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீதிபதிகள் அரசியலமைப்பின் பாதுகாவலர்கள் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
/
நீதிபதிகள் அரசியலமைப்பின் பாதுகாவலர்கள் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
நீதிபதிகள் அரசியலமைப்பின் பாதுகாவலர்கள் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
நீதிபதிகள் அரசியலமைப்பின் பாதுகாவலர்கள் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
ADDED : ஏப் 28, 2025 04:23 AM
புதுச்சேரி: நீதிபதிகள் முடிவுகள் தனிநபர்களின் வாழ்க்கையிலும் சமூகத்தின் கட்டமைப்பிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
புதுச்சேரி அரசு சட்டக்கல்லுாரியில் பயின்ற 9 ஐகோர்ட் நீதிபதிகளுக்கான பாராட்டு விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:
நீதிபதிகள் சட்டத்தின் மொழிபெயர்ப்பாளர்கள். நமது ஜனநாயகத்தின் வடிவமைப்பாளர்கள். அரசியலமைப்பின் பாதுகாவலர்கள். அவர்களின் முடிவுகள் தனிநபர்களின் வாழ்க்கையிலும் சமூகத்தின் கட்டமைப்பிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நீதிபதிகள் எழுதும் ஒவ்வொரு தீர்ப்பும், உத்தரவும், பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இந்தியாவில் நீதியை நிலை நாட்டுகின்றது. உலகம் வேகமாக மாறி வருகின்றது.
சைபர் கிரைம், காலநிலை மாற்றம் தொடர்பான நீதி, செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகள் வரை நீதிமன்றங்கள் முன்கொண்டுவரப்படும் சிக்கள்களாக பெருகி வருகின்றன.
எனவே, இந்த புதிய சகாப்தத்தில் உள்ள நீதிபதிகள் மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளும் திறந்த தன்மை கொண்டிருக்க வேண்டும்.
சட்டம் எவ்வளவு உருவாகினாலும், நீதித்துறையின் முக்கிய மாண்புகள் எப்போதும் நிலையானதாக இருக்க வேண்டும். சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நீதித்துறை மட்டுமே நம்பிக்கை அளிக்கிறது. கோர்ட் சாமானியர்களின் குரல் எதிரொலிக்கும் இடமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கவர்னர் பேசினார்.

