/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாப்பட்டில் ஸ்டேட் பாங்க் கிளை முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
/
காலாப்பட்டில் ஸ்டேட் பாங்க் கிளை முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
காலாப்பட்டில் ஸ்டேட் பாங்க் கிளை முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
காலாப்பட்டில் ஸ்டேட் பாங்க் கிளை முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
ADDED : மார் 03, 2024 05:13 AM

புதுச்சேரி: சின்ன காலாப்பட்டில் புதிய ஸ்டேட் பாங்க் கிளையை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
புதுச்சேரி, சின்ன காலாப்பட்டு, இ.சி.ஆர்., அசோக் பீச் ரிசார்ட் எதிரில், ஸ்டேட் பாங்க் கிளையை முதல்வர் ரங்கசாமி நேற்று திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பங்கேற்றார்.
விழாவில், புதிய கணக்கு துவங்கிய வாடிக்கையாளர்களுக்கு வங்கி பாஸ் புத்தகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, தனிநபர் காப்பீடு திட்டத்தின் மூலம், விபத்தில் இறந்த வாடிக்கையாளர் குடும்பத்திற்கு விபத்து காப்பீடு ரூ. 20 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, கார்ப்பரேட் சமூக பொறுப்பின் அங்கமாக, புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கு பேட்டரி கார் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஸ்டேட் பாங்க் சென்னை வட்ட முதன்மை பொது மேலாளர் ரவி ரஞ்சன், பொது மேலாளர் பிரவாஷ் குமார் சுபுதி, துணை பொது மேலாளர் கல்பனா, மண்டல மேலாளர் சதீஷ்பாபு, உதவி பொது மேலாளர்கள் நடராஜன், அன்புமலர், முதன்மை மேலாளர்கள் சரவணன், சீனிவாசன், பரணிதரன், கிளை மேலாளர் ஜெயலட்சுமி, நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.