/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் கலச புறப்பாடு
/
பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் கலச புறப்பாடு
ADDED : மே 26, 2025 12:23 AM

புதுச்சேரி : புதுச்சேரி - தின்டிவனம் பைபாஸ் சாலை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் மண்டலபிேஷகம் மற்றும் நவசண்டியாக பெருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, நேற்று, இரண்டாம் கால 108 கலச பூஜை மற்றும் இரண்டாம் கால சண்டிகா நவாவரண பூஜை, சண்டி ேஹாமம் நடந்தது. அதனை தொடர்ந்து, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மச்சாரி பூஜை நடந்தது.தொடர்ந்து, பூர்ணாஹீதி திபாராதனை, யாத்ராதானம் கலசம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. திரிபுரசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கலசாபிேஷகத்தை அடுத்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் கோவில் உள் புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.