/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'விரைவில் கமலஹாசனுக்கு ராஜ்யசபா எம்.பி., கிடைக்கும்'
/
'விரைவில் கமலஹாசனுக்கு ராஜ்யசபா எம்.பி., கிடைக்கும்'
'விரைவில் கமலஹாசனுக்கு ராஜ்யசபா எம்.பி., கிடைக்கும்'
'விரைவில் கமலஹாசனுக்கு ராஜ்யசபா எம்.பி., கிடைக்கும்'
ADDED : ஏப் 26, 2025 04:22 AM

புதுச்சேரி :  கமலஹாசன் விரைவில் ராஜ்ய சபா எம்.பி., ஆவார் என, தமிழக மாநில பொதுச் செயலாளர் அருணாசலம் கூறினார்.
புதுச்சேரி மாநில மக்கள் நீதி மையம் சார்பில், காலாப்பட்டு தொகுதியில் மாநில பொது செயலாளர் சந்திரமோகன் தலைமையில் நேற்றிரவு ஆலோசனை கூட்டம்  நடந்தது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக மாநில பொதுச் செயலாளர் அருணாசலம்  பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் வேலை வாய்ப்பில் சிறந்த மாநிலமாக முன்னிலை வகிக்கிறது.
பாஜ., கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி வேலை வாய்ப்பின்றியும், மாநில அந்தஸ்து கிடைக்காமலும் பின் தங்கி உள்ளது.
வரும் தேர்தலில் புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு 26 இடங்கள் கிடைக்கும் என, தற்போதைய கருத்துக் கணிப்புகள் கூறி வருகின்றன. தமிழகத்தில் ராஜ்ய சபா காலியிடம் இல்லை. அதனால் கமலஹாசன் ராஜ்யசபா எம்.பி., ஆக முடியாத நிலை இருந்து வந்தது. விரைவில் அந்தப் பதவிக்கு அவர் வருவார்' என்றார்.
கூட்டத்தில் புறநகர பொது செயலாளர் முருகேசன்,  மாநில செயலாளர்கள் சக்திவேல், ரூபன் தாஸ், பழனிவேலன், சக்திவேல் பட்ரோஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

