ADDED : ஜூலை 16, 2025 01:38 AM

புச்சேரி : காமராஜர் பிறந்த நாள் விழா அரசு சார்பில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரி, காமராஜ் சாலை - அண்ணா சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், ஜான்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், நேரு, லட்சுமிகாந்தன், பாஸ்கர், பிரகாஷ்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ஜ.,
மாநில பா.ஜ., தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எம்.ஏ., வெங்கடேசன், மற்றும் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்.,
மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், மூத்த துணைத் தலைவர் தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதிய நீதிகட்சி
மாநில அமைப்பாளர் தேவநாதன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிர்வாகிகள் ராமகாமராஜ், நடராஜன், வேள்பாரி, கேசவன், ராஜேந்திரன், இளங்கோ, வழக்கறிஞர் சேகர், சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.