/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கம்பன் அரசு பள்ளி மாணவர்கள் பளு துாக்கும் போட்டியில் சாதனை
/
கம்பன் அரசு பள்ளி மாணவர்கள் பளு துாக்கும் போட்டியில் சாதனை
கம்பன் அரசு பள்ளி மாணவர்கள் பளு துாக்கும் போட்டியில் சாதனை
கம்பன் அரசு பள்ளி மாணவர்கள் பளு துாக்கும் போட்டியில் சாதனை
ADDED : பிப் 13, 2025 05:01 AM

நெட்டப்பாக்கம்: மாநில அளவிலான பளு துாக்கும் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை துணை சபாநாயகர் ராஜவேலு பாராட்டினார்.
புதுச்சேரி கல்வித்துறை மூலம் அரசு பள்ளி அளவில் பளு துாக்கும் போட்டி வீராம்பட்டினம் ஜீவரத்தினம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்தது. இதில், புதுச்சேரியில் இருந்து 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி சக்திசரஸ்வதி முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
மாணவர் கிரிபாலன் இரண்டாமிடம் பிடித்தார். இதற்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி துணை முதல்வர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் மதனசுந்தரி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு மாநில அளவில் முதல் இரண்டு பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். நெட்டப்பக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் கருத்துரை வழங்கினார். விரிவுரையாளர் எழில்வேந்தன், மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விரிவுரையாளர் லதா நன்றி கூறினார்.

