/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து மாநில நிர்வாகிகளிடம் காங்., கருத்து கேட்பு
/
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து மாநில நிர்வாகிகளிடம் காங்., கருத்து கேட்பு
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து மாநில நிர்வாகிகளிடம் காங்., கருத்து கேட்பு
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து மாநில நிர்வாகிகளிடம் காங்., கருத்து கேட்பு
ADDED : பிப் 20, 2025 06:23 AM

புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்துமாநில நிர்வாகிகளின் கருத்துகளை காங்., கேட்டறிந்து வருகிறது.
சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் காங்., கட்சி மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நேற்று முதல் துவக்கி உள்ளது. பொது செயலாளர்கள், செயலாளர்கள், அணி தலைவர்களிடம் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் தனித்தனியே கருத்துகளை கேட்டறிந்தார்.
கருத்து கேட்பு கூட்டத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
புதுச்சேரி மாநில காங்., பொறுப்பாளரை கட்சி தலைமை மாற்றியுள்ளது. புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கிரீஷ்சவுதாகர் விரைவில் புதுச்சேரிக்கு வந்து சட்டசபை தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிய உள்ளார்.
சட்டசபை தேர்தல் தொடர்பாக கட்சியின் நிர்வாகிகள் தங்களது கருத்துகளை, பெயர், பொறுப்புகளுடன் என்னிடம் தெரிவிக்கலாம்.
பூத் அளவில் 10 பேர் பணியாற்ற வேண்டும். அவர்களும் காங்., கமிட்டியிடம் தொடர்பில் இருக்க வேண்டும். இந்த கருத்து கேட்பு மக்களின் எண்ணங்கள், உணர்வுகளை தெரிந்து கொள்ள உள்ளோம். காங்., அனுதாபியாக உள்ளவர்கள் கூட தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.
மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.,வினர் புதிதாக வாக்காளர்களை சேர்த்துள்ளனர். இவர்களை சுற்றுலா வாக்காளர்கள் என கூறுகின்றனர். இவர்கள் வேறு மாநிலம், தொகுதியை சேர்ந்தவர்களாக இருப்பர். தேர்தலில் மட்டும் ஓட்டளித்துவிட்டு சென்றுவிடுவர். இது போன்ற தில்லுமுல்லுகளை நிர்வாகிகள் கண்காணித்து கட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றார்.