/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக்சபா தேர்தலில் யாருக்கு ஆதரவு கண்ணன் ஆதரவாளர்கள் ஆலோசனை
/
லோக்சபா தேர்தலில் யாருக்கு ஆதரவு கண்ணன் ஆதரவாளர்கள் ஆலோசனை
லோக்சபா தேர்தலில் யாருக்கு ஆதரவு கண்ணன் ஆதரவாளர்கள் ஆலோசனை
லோக்சபா தேர்தலில் யாருக்கு ஆதரவு கண்ணன் ஆதரவாளர்கள் ஆலோசனை
ADDED : மார் 18, 2024 03:32 AM

புதுச்சேரி :  லோக்சபா தேர்தலையொட்டி கண்ணன் ஆதரவாளர்கள் கூட்டம் சற்குரு ஓட்டலில் நேற்று நடந்தது.
கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து தொகுதிகளை சேர்ந்த கண்ணன் ஆதரவாளர்கள் பங்கேற்று தங்களது அரசியல் ஆலோசனை தெரிவித்தனர்.
பெரும்பாலான ஆதரவாளர்கள் சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்துவோம் என்று கருத்துகளை முன் வைத்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., மனோகர் பேசும்போது, மறைந்த தலைவர் கண்ணன் வகிக்காத பதவிகள் இல்லை. அவர் 30 தொகுதியை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலைவாங்கி கொடுத்தார். அதனால் தான் அவருடைய ஆதரவாளர்கள் இன்னும் வலிமையாக நன்றி உணர்வோடு உள்ளனர். கண்ணனின் வாரிசான விக்னேஷ் தலைமையில் திரண்டுள்ளனர்.
இவர்களை ஒருங்கிணைத்து  கண்ணன் பெயரில் காங்.,கட்சியை உருவாக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் நம்மை பயன்படுத்திக்கொண்டு துாக்கி எறியலாம்.தனி கட்சி ஆரம்பித்து நம் ஓட்டு வலிமையை காட்ட வேண்டும். அப்போது தான் எல்லா கட்சியும் நம்மை தேடி வந்து பேச்சுவார்த்தை நடத்துவர் என்றார்.
இறுதியாக பேசிய விக்னேஷ் கண்ணன்,லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால் கட்சி துவங்குவதை பின் பார்த்து கொள்ளலாம்.
விரைவில் கண்ணன் பெயரில் இயக்கம் தொடரப்படும். லோக்சபா தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பிறகு அறிவிக்கப்படும் என்றார்.

