UPDATED : அக் 14, 2026 07:34 PM
ADDED : அக் 14, 2026 07:19 PM
சிறுவனின் தந்தை மீது வழக்கு: காரைக்கால், திருநள்ளாறு அடுத்த நல்லெழுந்துாரை சேர்ந்தவர் ஆனந்த், 36; பெக்லைன் டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு அம்பகரத்துார் சாலையில் தனது அப்பாச்சி பைக்கை (பி.ஒய்02 இசட் 4322) ஓட்டிச் சென்றார். அவருடன் அதைப் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார், 26, என்பவர் பின்னால் அமர்ந்து சென்றார்.
அப்போது எதிரே 17 வயது சிறுவன் ஓட்டி வந்த ஸ்பிளண்டர் பைக் (டி.என் 50 ஏ.கியூ 6024) நேருக்கு நேர் மோதியது. ஆனந்த், ராஜேஷ்குமார் மற்றும் சிறுவன் உள்ளிட்ட மூவரும் படுகாயமடைந்தனர்.
அவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர் பரிசோதித்து ஆனந்த் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார், விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தை திருக்கட்டாரம் ரத்தினவேல், 45, மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தாக்கிய 2 பேருக்கு வலை: காரைக்கால் காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் சுரேஷ், 46; தோமாஸ் அருள் வீதியில் உள்ள மதுபானக்கடையில் சப்ளையர். இங்கு நேற்று முன்தினம் இரவு காரைக்கால் சோத்திலால் நகரை சேர்ந்த கணேசன், 38, அவரது அண்ணன் கார்த்தி, 40, ஆகியோர் மது அருந்துபோது கடையில் வேலை செய்யும் சுரேைஷ கார்த்தி ஆபாசமாக திட்டினார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணேசன் டேபிளில் இருந்த காலி மதுபாட்டிலால் சுரேைஷ தலையில் தாக்கினார். காயம் அடைந்த அவர், அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுரேஷ் புகாரின் பேரில், கணேசன், கார்த்தி ஆகியோர் மீது நகர காவல் நிலைய பேலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.
ரகளை செய்தவர் கைது: திருப்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். திருப்பட்டினம் போலகம் பிப்பிடிக் மைதானத்தில், குடிபோதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட நாகூர், சன்னமங்களம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன், 31, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண் மாயம்: கோட்டுச்சேரி, ஜெயலட்சுமி காலனியை சேர்ந்த ஜெயக்குமார். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் ஹேமாவதி, 19; கோட்டுச்சேரி சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 11ம் தேதி வேலைக்கு சென்ற ஹேமாவதி இரவு வீடு திரும்பவில்லை.
இதுக்குறித்து நேற்று முன்தினம் அவரது தாய் சாந்தி அளித்த புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
