தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி


UPDATED : அக் 14, 2026 07:23 PM

ADDED : அக் 14, 2026 07:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:23 PM ADDED : அக் 14, 2026 07:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போலீசார் விசாரணை: சென்னை, கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் சரண்ராஜ், 37; கூலித் தொழிலாளி. இவரது மனைவி நீலா. இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், நீலா தனது இரண்டு பிள்ளைகளுடன் செஞ்சியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதிலிருந்து சரண்ராஜ் சரிவர வேலைக்கும் செல்லாமல் குடி பழக்கத்திற்கு அடிமையானார். அவ்வப்போது கடலுார், தோட்டப்பட்டில் உள்ள அவரது பெரியப்பா மோகன் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சரண்ராஜ், மோகன் வீட்டிற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் மாலை பாகூர் அடுத்த சோரியங்குப்பத்தில் உள்ள மதுபான கடை எதிரே சரண்ராஜ் இறந்து கிடந்தார்.

இது குறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து, அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மூன்று பேர் காயம்: வில்லியனுார், கணுவாபேட்டையை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 42. இவரது தந்தை பொன்முடி, 71. இவருக்கு பார்வை பாதிப்பு இருந்தது. கோவிந்தசாமி, தனது தந்தை மற்றும் தாய் சித்ரா, 64, ஆகியோரை கடந்த 7ம் தேதி பேஷன் புரோ பைக்கில் தவளக்குப்பதில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

உறுவையாறு – அபிேஷகப்பாக்கம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலை வளைவில் சென்றபோது, அவர்கள் மீது எதிரே வந்த பல்சர் பைக் மோதியது.

இதில், கோவிந்தசாமி, பொன்முடி, சித்ரா மூவரும் காயமடைந்தனர். மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய நபர் பைக்கை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றார்.

விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய நபரை தேடி வருகின்றனர்.

ரூ. 3.93 லட்சம் ‘அபேஸ்: ஆலங்குப்பம், சஞ்சீவி நகரை சேர்ந்தவர் சங்கர், 45; ஆசாரியான இவர், அதே பகுதியில் சிறிய பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மொபைல் போனிற்கு கடந்த 10ம் தேதி ரூ.9,500 பணம் எடுத்ததாக மெசேஜ் வந்தது.

இது குறித்து சங்கர் கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் தெரிவித்து தனது மொபைல் போனை தந்துள்ளார். அப்போது சிறிது நேரத்தில் அடுத்தடுத்து, நான்கு முறை பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது. அதிர்ச்சியடைந்த சங்கர் இது குறித்து டி நகர் போலீஸ் ஸ்டேஷனில், மொத்தம் 5 தவணைகளில், 3 லட்சத்து 93 ஆயிரத்து 563 ரூபாய் எடுக்கப்பட்டதாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் மூதாட்டி காயம்: தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையம், புதுநகரை சேர்ந்தவர் வள்ளி, 60. இவர் கடந்த 8ம் தேதி மாலை மேல்அழிஞ்சப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமக்கிருஷ்ணன் என்பவருடன், ஸ்பிளண்டர் பைக்கில் அமர்ந்து, அபிஷேகப்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

டி.என்.பாளையம் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் போடுவதற்காக பைக்கை திருப்பி உள்ளார். அவர்களுக்கு பின்னால் வந்த சுசூகி அக்சஸ் ஸ்கூட்டர், பைக் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி வள்ளி சாலையில் விழுந்து காயமடைந்தார்.

விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்த அழகுவேல், 41, என்பவரை தேடி வருகின்றனர்.

கத்தியுடன் திரிந்த 4 பேர் கைது: மேட்டுப்பாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் துரைகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு குருமாம்பேட் புத்துமாரியம்மன் கோவில் அருகில் வாகன சோதனை செய்தனர்.

அப்போது, பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள், போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து, சோதனை செய்ததில், இருவரும் கத்தி மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.

அவர்கள், முத்திரைபாளையம் ஜீவா,26; வசந்தகுமார்,22, என, தெரிந்தது. இவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். கத்தி மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

மற்றொரு சம்பவம்:: மேட்டுப்பாளையம் உதவி சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காந்திதிருநல்லுார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டினர். அந்த வழியாக இரு பைக்குகளில் வந்த இரண்டு போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர்.

அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் இருவரும் கத்தி மறைத்து வைத்திருந்ததும், அவர்கள் முத்திரைபாளையம் சந்துரு, 21; அரவிந்த், 19, ஆகியோர் என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, கத்தி மற்றும் இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us