ADDED : ஜன 27, 2026 04:38 AM

அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 77வது குடியரசு தினவிழா நேற்று கடல்கரை சாலையில் கொண்டாடப்பட்டது.
கலெக்டர் ரவிபிரகாஷ் காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசார் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பல்வேறு துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நிகழ்ச்சியில் சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுசன்யா, துணை கலெக்டர் பூஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
