ADDED : அக் 25, 2026 09:41 PM
3 பேர் காயம்: நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம், ஏர்வாடியைச் சேர்ந்தவர் கணபதி, 53. இவர், இன்று (அக்.,25) அதிகாலை தனது மகள் ஸ்ரீஹரிணியை, யமஹா ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு திருநள்ளாறு சாலையில் சென்றார். அப்போது, எதிரே காரைக்கால் நேரு நகர் திருநங்கை லக் ஷனா, 23, என்பவர், ஓட்டி வந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் கணபதி ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், கணபதி, ஸ்ரீஹரிணி, திருநங்கை லக் ஷனாவு மூவரும் காயமடைந்தனர். அவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து காரைக்கால் சாலை போக்குவரத்து நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
3 பேர் கைது: காரைக்கால், நெடுங்காடு காவல்நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் நேற்று (அக்.,24) ரோந்து சென்றார். அப்போது மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட மயிலாடுதுறை, தரங்கம்பாடி, காட்டுச்சேரி பகுதியை சேர்ந்த முருகன் மகன் முகேஷ், 19, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கீழவாஞ்சூர் பகுதியில் நேற்று திருப்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் புஷ்கரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட மயிலாடுதுறை, மாவட்டம், பூம்புகார் பகுதியை சேர்ந்த மணிமாறன், 29, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
நிரவி காவல் நிலைய போலீசார் நேற்று கீழமனை முதன்மைச் சாலை சந்திப்பில் ரோந்து சென்றனர்.
அங்கு மதுபோதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி பகுதியை சேர்ந்த கருணாகரன், 38, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
