UPDATED : அக் 28, 2026 06:02 PM
ADDED : அக் 28, 2026 05:59 PM
கார் மோதி 2 பெண்கள் காயம்: நெடுங்காடு, மேலகாசாகுடி தென்பாதி சாலை சந்திப்பில், நேரு நகரைச் சேர்ந்த சவுரிராஜன், 64, என்பவர் கடந்த 26ம் தேதி டொயோட்டா லிவா கரை (பி.ஒய் 02 எக்ஸ் 3062) ஓட்டி வந்தார். அப்போது, எதிரே சாலையோரம் நடந்து சென்ற மேலகாசாகுடி பொன்னுசாமி மனைவி அமிர்தம், 62, என்பவர் மீது கார் மோதியது. காயமடைந்த அவர் அரசு மருந்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய சவுரிராஜன் மீது நகரப் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் காஞ்சிபுரம் கோவில்பத்து சாலை சந்திப்பில் கடந்த 30ம் தேதி திருவாரூர் மாவட்டம், நன்னிலம், கலியக்குடி கதிர்வேலு மனைவி சுசித்ரா, 38, என்பவர் டி.வி.எஸ்., ஸ்கூட்டியில் (டி.என்.50.ஏ.ஜே. 6307) சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக அதிவேகமாக வந்த மாருதி சுசுகி எர்டிகா கார் ஸ்கூட்டி மீது மோதியது.
காயமடைந்த சுசித்ரா அரசு மருந்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து குறித்து கார் டிரைவர் காரைக்கால், மாரியம் நகர் ரவிசங்கர், 39, மீது நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
போதை நபர்கள் கைது: காரைக்கால், சிங்காரவேலர் சாலையில் உள்ள ராயல் மஹால் அருகே நேற்று முன்தினம் காவலர் விவேக் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது மதுபோதையில் பொது மக்களை ஆபாசமாக பேசிய காரைக்கால் பிள்ளைத் தெருவாசல் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் மணிகண்டன், 20, என்பவரை நகர போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், கீழவஞ்சூர் நாகூர் மெயின் ரோட்டில் சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மதுபோதையில் ஆபாசமான பேசிய நாகப்பட்டினம், வடக்குத் தெருவைச் சேர்ந்த கந்தசாமி, 60, என்பவரை திருப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.
