பா.ஜ., சார்பில், 31ம் தேதி ஊர்வலம்: செல்வகணபதி எம்.பி., தகவல்
பா.ஜ., சார்பில், 31ம் தேதி ஊர்வலம்: செல்வகணபதி எம்.பி., தகவல்
UPDATED : அக் 28, 2026 06:12 PM
ADDED : அக் 28, 2026 06:07 PM
புதுச்சேரி: எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக செல்வகணபதி எம்.பி., தெரிவித்துள்ளார்.
அவர், கூறியதாவது:
பொருளாதார வளர்ச்சியில் நாம் தற்போது நான்காம் இடத்தில் உள்ளோம். உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்கப்படும் என கணிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் தீவிரவாதத்தை உண்டாக்க வேண்டும். இறையாண்மைக்கு பாதகம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ராகுல் தலைமையில், காங்., முயற்சித்து வருகிறது.
எஸ்.ஐ.ஆர்., பணியானது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. தேர்தல் ஆணையம் சீர்திருத்த பணிகளை மிக துல்லியமாக செய்து வருகிறது.
ஓட்டு திருட்டு நடந்தது உண்மை என்றால், எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பிறகு கேரளா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வாக்கு திருட்டு நடக்கவில்லையா.
இவர்கள் வெற்றி பெற்ற பிறகும் ஓட்டு திருட்டு என்ற பொய்யான குற்றச்சாட்டி முன்வைக்கிறார்கள். மாணவர்களை தவறான வழியில் எடுத்து செல்கிறார்கள். அயல்நாட்டு தீவிரவாதிகள், எதிர்க்கட்சிகள் மாணவர்களுக்கு தவறான கருத்துக்களை கூறி போராட வைக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பு. அதை யாரும் மாற்ற முடியாது. மத்திய அரசிற்கும், தேர்தல் ஆணைய செயல்பாடுகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கர்நாடகாவில் ஓட்டு சீட்டு முறைப்படி நடந்த எம்.எல்.சி., தேர்தலில் காங்., கட்சியினர் தோல்வி அடைந்துள்ளனர்.
பா.ஜ., மாநிலத்தில் வெற்றி பெறவதற்கும், ஆட்சி அமைப்பதற்கும் எஸ்.ஐ.ஆருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதிர்க்கட்சியினரின் போராட்டத்திற்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
புதுச்சேரியில் வரும் 31ம் தேதி பா.ஜ., சார்பில் மிகப்பெரிய பேரணி நடக்க உள்ளது. இதில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். இதில் எஸ்.ஐ.ஆர்., குறித்து எடுத்து சொல்லப்படும். மாநில அந்தஸ்திற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்’ என்றார்.
