ADDED : நவ 02, 2026 05:41 PM
போதை வாலிபர் கைது: திருப்பட்டினம் போலகம் பகுதியில் நேற்று (நவ.,1) சப் இன்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில் மது போதையில் ஆபாசமாக பேசிய நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் நாகப்பட்டினம் வடகரை வண்ணாங்குளம் பகுதியைச் சேர்ந்த ரவி மகன் ரஞ்சித்குமார் ,30; என்பதும் , திருப்பட்டினம் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
வாலிபர் சாவு: காரைக்கால் நெடுங்காடு கீழ பொன்பெத்தி பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சிலம்பரசன், 31; இவர் நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். உடன் அவரை அவரது குடும்பத்தினர் நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர் சிலம்பரசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
