ADDED : நவ 04, 2026 04:17 PM
கார் மோதி வாலிபர் பலி: நாகப்பட்டினம் மாவட்டம், கோபுராஜபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 24. இவர் நேற்று (நவ.,3), அதேப் பகுதியை சேர்ந்த தனது நண்பர் கணேஷ்குமார், 36, என்பவரை டி.வி.எஸ்., எக்ஸ்எல் மொபட்டில் (பி.ஒய்.02.யூ.1462) அழைத்துக் கொண்டு, திருப்பட்டினம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அவ்வழியாக வந்த மகேந்திரா பொலிரோ கார் (டி.என்.95 கே 3486 ) பைக் மீது மோதியது. அருண்குமார், கணேஷ்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இருவரையும் திருப்பட்டினம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மீட்டு, அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அருண்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆபாசமாக பேசிய நபர் கைது: நிரவி அடுத்த காந்தி நகரில் உள்ள புவனேஸ்வரி, 41, என்பவர் வீட்டின் முன், நேற்று அதே பகுதியைச் சேர்ந்த சசிக்குமார், 34, என்பவர் தகராறு செய்தார். அப்போதுனா புவனேஸ்வரி மற்றும் அவரது மாமனாரை ஆபாசமான சசிக்குமார் பேசினார்.
இதுக்குறித்து புவனேஸ்வரி புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குபு் பதிந்து, சசிகுமாரை கைது செய்தனர்.
ஒருவர் பலி: திருப்பட்டினம், வெள்ளகுள காலனியைச் சேர்ந்தவர் அரவிந்தன், 37. இவர், நேற்று ஒயிட் ஹவுஸ் அருகே யமாஹா பைக்கில் (பி.ஒய்.01.வி.எப்2891) அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பைக் சாலையோரத்தில் இருந்த தடுப்பின் மீது மோதியது.
படுகாயமடைந்த அரவிந்தன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (நவ.,4) இறந்தார். விபத்து குறித்து திருப்பட்டினம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் கைது: கோட்டுச்சேரி அடுத்த வரிச்சிகுடி, கழுகுமேடு நீர்தேக்கம் அருகில் நேற்று சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, மது போதையில் ஆபாசமாக பேசிய திருக்கடையூர் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் ஹரிஹரன், 21, என்பவரை கோட்டுச்சேரி போலீசார் கைது செய்தனர்.
