தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கராத்தே, சிலம்பம் போட்டிகளில் வென்ற மாணவர்கள் பாராட்டு

கராத்தே, சிலம்பம் போட்டிகளில் வென்ற மாணவர்கள் பாராட்டு

கராத்தே, சிலம்பம் போட்டிகளில் வென்ற மாணவர்கள் பாராட்டு


UPDATED : நவ 05, 2026 11:44 PM

ADDED : நவ 04, 2026 03:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:44 PM ADDED : நவ 04, 2026 03:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: தென்னிந்திய கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில், சாதனை படைத்த மாணவர்களுக்கு, கலாம் மக்கள் சமூக சேவை இயக்கம் சார்பில் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

தென்னிந்திய அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டி கடலுாரில் நடந்தது. இதில், ஜப்பான் ஷிடோ-ரியூ ஷுகோகா இசுஷ் இந்தியா, புதுச்சேரியுடன் தொடர்புடைய ஷின்டோ கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். அதேபோல், சிலம்பப் போட்டியிலும், மாணவர்கள் வெற்றிகளைப் பெற்றனர்.

கராத்தே போட்டியில் மாணவர்கள் தனிஷ்கர், ஐஸ்வர்யா, வைஷ்ணவி, சாக்ஷி, பவித்ரா ஜனனி, மவுலியா ஆகியயோரும், சிலம்பப் போட்டியில் மாணவர்கள் நிதீஷ்குமார், அனுஷா, ஸ்ரீ ரஞ்சிதா, சஞ்சய், கவின், கவின்ராஜ், கிஷாந்த், கார்த்திக், ஆர். கவின், கினிஷா ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள், மாஸ்டர்கள் முனியப்பன், ரவீந்திரன் ஆகியோருக்கு பாராட்டு விழா கலாம் மக்கள் சமூக சேவை இயக்கம் சார்பில், கன்னியக்கோவிலில் நடந்தது.

இயக்கத்தின் தலைவர் சாண்டில்யன் ஆலோசனைபடி, இளைஞர் அணி சார்பில் அரவிந்தன் மற்றும் ரோஷன் ஆகியோர் கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில் வென்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us