UPDATED : நவ 10, 2026 10:27 AM
ADDED : நவ 10, 2026 10:25 AM
விபத்தில் ஓய்வு ராணுவ வீரர் காயம்
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் களிமங்கலம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் 56, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்.இவர் கடந்த 6-ம் தேதி காரைக்காலுக்கு பைக்கில் காரைக்காலுக்கு வந்து விட்டு பைக்கில் திரும்பினார். சென்றுள்ளார். அப்போது திருப்பட்டினம் பைபாஸ் சாலையில் இயற்கை உபாதைக்காக பாஸ்கரன் பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மினி லோடு வேன் பைக் மீது மோதி, பாஸ்கர் மீது மோதியல் அவர் படுகாயமடைந்தார்.
புகாரின் பேரில் திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வேன் டிரைவர் முருகையன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்னறர்.
பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்,37: இவர் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட நேரத்தில் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது திருநள்ளாறு சப் இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
அதேபோல் நெடுங்காடு அண்ணாவாசல் பிரதான சாலையைச் சேர்ந்த சரத்,36 ;என்பவர் மீது போலீசார் பொது இடத்தில் பட்டாசு வெடித்ததாக அவர் மீது நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
காரைக்கால் கோட்டுச்சேரி வரிச்சிக்குடி புளியந்தோப்பு பகுதியில் இரவு பட்டாசுகளை வெடித்தவரை சப்.இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த சுரேஷ், 47; என்பதும், அவர் மீது கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போதையில் ரகளை : இருவர் கைது
காரைக்கால் திருப்பட்டினம் போலகம் நாகூர் மெயின் ரோட்டில் மதுபோதையில் பொது இடத்தில் ஆபாசமான பேசிய திருப்பட்டினத்தை சேர்ந்த அந்தோணிசாமியின் மகன் வின்சென்ட், 27; மீது திருப்பட்டினம் போலீசார் வழக்குபண பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தரங்கம்பாடியைச் சேர்ந்த மோகன் மகன் தனுஷ்,23; சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கராஜின் மகன் அஜய்,21; இருவரும் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர், நெடுங்காடு போலீசார் இருவர் மீது வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.
கொலை மிரட்டல்
காரைக்கால் நெடுங்காடு மேலகாசாக்குடியைச் சேர்ந்தவர் ஜெயராமன், 55; இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அதைப்பகுதியை சேர்ந்த ராஜா மகன் ரமேஷ், 29; ஜெயராமனை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயமடைந்த ஜெயராமனை அருகில் இருப்பவர்கள் மீட்டு அரசு மருந்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
