UPDATED : நவ 10, 2026 10:27 AM
ADDED : நவ 10, 2026 10:25 AM

அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் நேற்று காலை குறிஞ்சிப்பாடி வி.எம்.பி நகர் வழியே சென்றார். அப்போது பின் தொடர்ந்து சென்ற நபர், அந்த பெண்ணை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த இளம் பெண் கூச்சலிட்டதும் அந்த வாலிபர் தப்பிச் சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சித்தாலிக்குப்பம், அம்பேத்கர் நகர் லோகநாதன் மகன் கவுதம்,22; என்பவரை கைது செய்தனர்.
