தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்கால் கிரைம் செய்திகள்

காரைக்கால் கிரைம் செய்திகள்

காரைக்கால் கிரைம் செய்திகள்


UPDATED : நவ 13, 2026 06:34 PM

ADDED : நவ 13, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 06:34 PM ADDED : நவ 13, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐந்து பேர் கைது: காரைக்கால், அம்பகரத்துார் கடை வீதியில் மது போதையில் ரகளையில் ஈடுப்பட்ட அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மகன் கார்த்தி, 41, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருநள்ளாறில்பொது இடத்தில் மதுபோதையில் தகராறு செய்த அம்பகரத்துார் பாரதி, 28, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பட்டினம் போலகம் தொழில்பேட்டை மைதானத்தில் மதுபோதையில் ரகளை செய்த கீழவாஞ்சூர் கீர்த்திவாசன், 32, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

நிரவி புறவழிச்சாலை சுரங்கப்பாதை அருகில் பொது இடத்தில் மது அருந்திய நாகப்பட்டினம், அகரகோந்தை பகுதியை சேர்ந்த பாலமுருகன், 21; ஸ்டீபன்ராஜ், 19, ஆகியோரை நிரவி போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டி உடல் கருகி சாவு: திருநள்ளாறு, சுரக்குடி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கவுதமன்; வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது தாய் அங்காளம்மை, 86, நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மெத்தையில் படுத்திருந்தபோது அருகில் கொசு வத்தியை ஏற்றி வைத்திருந்தார்.

நள்ளிரவில் வீட்டில் புகை வந்தததால், கவுதமன் எழுந்து பார்த்தபோது, அவரது தாய் படுத்திருந்த மெத்தை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோது, அங்காளம்மை உடல் முழுவதும் தீக்காயங்களுடன் கருகி இறந்து கிடந்தார். புகாரின்பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சிகிச்சை பலனின்றி சாவு: காரைக்கால், தலத்தெரு பாரதியார் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் எசேக்கியேல் ரூபன்ராஜ், 44; டிரைவர். இவர், கடந்த 8ம் தேதி இரவு தனது டி.வி.எஸ்., பைக்கில் கோட்டுச்சேரி, கிழக்காசாக்குடி, பாரதியார் மெயின் ரோடு வழியாக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது பைக் மோதியது. கட்டுப்பாட்டை இழந்த ரூபன்ராஜ் சாலையில் விழுந்து படுகாயமடைந்தார்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us