ADDED : செப் 08, 2026 08:23 PM
காரைக்கால்: காரைக்காலில் விவசாயி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரைக்கால் அடுத்த திருநள்ளார் சேத்துார் பண்டாரவாடை கன்னிக்கோவில் தெருவை சேர்ந்த செல்வம், 60 ; விவசாயி. கடந்த 6ம் தேதி விவசாய வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மதிய உணவுக்காக வீட்டிற்கு வரும் செல்வம் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை உள்ள தெருவின் பின்புறம் உள்ள வயல்பகுதியில் செல்வம் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருந்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து திருநள்ளார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி மர்மமான முறையில் இறந்த சம்பவ பெரும் பரப்பரப்பு ஏற்படுதியுள்ளது.
