/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் கந்துாரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
/
காரைக்கால் கந்துாரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
காரைக்கால் கந்துாரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
காரைக்கால் கந்துாரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : பிப் 21, 2024 08:42 AM

காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்துாரி விழாவை முன்னிட்டுபல்லாக்கு ஊர்வலம் மற்றும் கொடியேற்றம் நடந்தது.
காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசல் என அழைக்கப்படும்மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில்,201ம் ஆண்டு கந்துாரி விழா நேற்று துவங்கியது. பிற்பகல் 3:00 மணிக்கு ரதம், பல்லாக்கு ஊர்வலம் துவங்கியது.
அலங்கரிக்கப்பட்ட ரதம், பல்லாக்குகள் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி ரதத்தில் கொண்டுவரப்பட்ட கொடி இரவு 9:00 மணிக்கு ஏற்றப்பட்டது. கந்துாரி விழாவையொட்டி நேற்று காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
வரும் 29ம் தேதி இரவு 9:00 மணிக்கு போர்வை வீதி வலம் வரும் நிகழ்ச்சி, இரவு 10:00 மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்படுதல் நடக்கிறது. மார்ச் 3ம் தேதி கொடி இறக்க நிகழ்ச்சி நடக்கிறது.
பல்லக்கு சரிந்ததால் பரபரப்பு
திருநள்ளாறு சாலை வழியாக சென்றபோது திடீரென பல்லக்கின் மேல் பகுதி முறிந்து ஒரு பக்கம் சரிந்தது. பின், மாற்று வாகனம் மூலம் பல்லக்கு பள்ளி வாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

