ADDED : பிப் 10, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்,: காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் 202ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது.
அன்றைய தினம் மாலை 3:00 மணிக்கு ரதம், பல்லக்கு ஊர்வலம் துவங்கியது. பெரிய பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதம், பல்லக்குகள் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. இரவு கொடியேற்றம் நடந்தது.
வரும் 17ம் தேதி இரவு ஹலபு என்னும் போர்வை வீதியுலா, இரவு 10.00மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்படுதல். 18 ம் தேதி அதிகாலை சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
ரதம் புறப்பாடில் நாஜிம் எம்.எல்.ஏ., மற்றும் புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டி தலைவர் இஸ்மாயில், சீனியர் எஸ்.பி.,லெட்சுமி செளஜன்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

