நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில், ஜோதி சிலம்பம் ஷத்திரிய குருகுலம் உள்ளது. இங்கு தமிழர்களின் பாரம்பரியமாக உள்ள வர்மக்கலை, கரலாக்கட்டை அழியாமல் இருக்க பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச கரலாக்கட்டை தினம் டிசம்பர் 12ம் தேதி, கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு, உலக சாதனைக்காக, அன்றைய தினம் புதுச்சேரி கடற்கரை சாலையில், கரலாக்கட்டை சுற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்கான பயிற்சி ஜோதி சிலம்பம் ஷத்திரிய குருகுலம் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில், இலங்கை, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இருந்து கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

