/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கராத்தே, தேக்வாண்டோ போட்டிகள் துவங்கியது
/
கராத்தே, தேக்வாண்டோ போட்டிகள் துவங்கியது
ADDED : பிப் 17, 2024 11:24 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான இரண்டு நாள் கராத்தே மற்றும் தேக்வாண்டோ போட்டிகள், லாஸ்பேட்டை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது.
புதுச்சேரி கராத்தே மற்றும் தேக்வாண்டோ சங்கம் சார்பில், நடந்த போட்டிகளை இந்திய விளையாட்டு ஆணைய புதுச்சேரி பொறுப்பாளர் ராஜேஷ், ஹோலிபிளவர் அறக்கட்டளை சேர்மன் வெங்கடேசன், வழக்கறிஞர் சசிபாலன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
புதுச்சேரி கரோத்தே சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். தேக்வாண்டோ சங்க பொதுச் செயலாளர் பாண்டியன், கராத்தே சங்க துணை தலைவர் மோகன் வரவேற்றனர். புதுச்சேரி விளையாட்டு சங்க புரவலர் திருவேங்கடம், என்.ஆர்.ஸ்போர்ட் சங்க சேர்மன் ராஜா, பளு துாக்கும் சங்க செயலாளர் கணபதி கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
போட்டியில், சப்ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அதிக புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று 18ம் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது.