/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கராத்தே நிபுணர் பிறந்த நாள் விழா
/
கராத்தே நிபுணர் பிறந்த நாள் விழா
ADDED : ஜன 08, 2026 05:24 AM

புதுச்சேரி: புதுச்சேரிமூத்த கராத்தே நிபுணர் ஜோதிமணி 70வது பிறந்தநாள் விழா கொண்டாடினார்.
அவருக்கு, புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன், சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.பிறந்த நாள் விழாவில், புதுச்சேரியில் கராத்தே கலையில் கருப்புப்பட்டை முதல் நபரான ஜோதிமணி கல்வித் துறையில் ஜவகர்பால் பவனில் 1980ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகாக கராத்தே பயிற்சியாளராக பணி புரிந்தார். அவர், புதுச்சேரியில் முதல் முதலாக கராத்தே போட்டியை அறிமுகப்படுத்தினார் என, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில கராத்தே சங்கத்தின் துணைத் தலைவர் மதிஒளி, கராத்தே பயிற்சியாளர்கள் திவாகர், கண்ணன்ஜவகர், முத்துக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

