ADDED : பிப் 13, 2025 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மாநில கராத்தே சங்கம், சிட்டோரியா கராத்தே பயிற்சி பள்ளி சார்பில், ஒரு நாள் கராத்தே பயிற்சி முகாம் நடந்தது.
காலாப்பட்டு தவமணி திருமண நிலையத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு, சீனியர் கராத்தே பயிற்சியாளர் சென்சாய் செல்வம் தலைமை தாங்கி, வீரர்களுக்கு பயிற்சியளித்தார்.
இதில், காலாப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
நவீன கட்டா மற்றும் சியாய் கராத்தே குறித்து விளக்கம் அளிக்கப் பட்டது.
கராத்தே பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு, அகில இந்திய கராத்தே சங்க தலைவர் வளவன் சான்றிதழ் மற்றும் பெல்ட் வழங்கி பாராட்டினார்.
பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.